Category Archives: அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்

Home / Archive by category "அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்"

சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் (29-09-2019) நடத்தப்பட்டது

சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று இரவு (29-09-2019) தொலைபேசி உரையாடல் வாயிலாக நடத்தப்பட்டது பின்வரும் நிகழ்வுகள் பற்றி அதில் விவாதிக்கப்பட்டது.

1. ரீகேப் முரசு புத்தகம் வெளியீடு தொடர்பாக ..

2. 2020ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவது v தொடர்பாக.

3. செப்டம்பர் 5 அன்று விழிப்புணர்வு பிரச்சாரம் திட்டமிட்ட அளவு நடைபெறாதது தொடர்பாக.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. ரீகேப் முரசு என்கிற புத்தகத்தின் பெயரை தமிழில் மறுவாழ்வு மலர் என்று மாற்றம் செய்வது, கூடுதலாக ஆசிரியர்களை சேர்த்து மேலும் சிறப்பாக நடத்துவது, ஆண்டுக்கு நான்கு அல்லது ஆறு முறை பதிப்பது குறித்த சாத்தியங்களை ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

2. 2020ம் ஆண்டு செயற்குழு/பொதுக்குழுக் கூட்டத்தை அமர்சேவா சங்கத்தில் அனுமதிபெற்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது

3. தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களில் அரசின் பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றவர்களுக்கும் பேட்டரி வீல் சேர் வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது

4. அடுத்த ஆண்டு செப்டம்பர் 5 விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேலும் கூடுதலான இடங்களில் நடத்துவது முயற்சி எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

– சிபா நிர்வாகக்குழு

 

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2017

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2017 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு அளவை பொருத்து, அவர்களுக்கு சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாடுமுழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை இவர்கள் எளிதில் பெறமுடியும். இந்த ஆதார் அட்டையை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது.

செய்தி உதவி – இணையதளம்

நீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி

தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறை படித்த இளைஞர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்குகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செய்தி உதவி – இணையதளம்

மேலும் விபரங்கள் – அரசு இணையம்

PDF தரவிறக்கம் – கோப்பு

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2015

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2015 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

சிபா பற்றி

Spinal Injured Persons Association (SIPA) is a Tamilnadu based registered self-help group working towards the upliftment of persons with spinal cord injury. At SIPA, we strive to create a peer network that has access to information regarding self care, medical advice, financial independence, sport and much more.