Category Archives: Uncategorized

Home / Archive by category "Uncategorized"

செப்டம்பர் 5. உலக தண்டுவட தினம்- SIPA அமைப்பு நடத்திய தண்டுவட நாள் விழிப்புணர்வு

செப்டம்பர் 5. உலக தண்டுவட தினத்தை முன்னிட்டு தேனியில் சிபா அமைப்பு மற்றும் ராம்ஜி டிரஸ்ட் இணைந்து நடத்திய. தண்டுவட நாள் விழிப்புணர்வு பேரணி நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிபா அமைப்பின் செயலாளர் திரு வேங்கட பூபதி அவர்கள் நிகழ்வை முன்னின்று நடத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் கண்டுவிட விழிப்புணர்வு நாள் காவல்துறை உதவியுடன் சிறப்பாக பேரணி நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முதுகுதண்டுவட பாதிப்பு தினமான இன்று சாலை விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு கொடுத்த தருணத்தில், இதில் கலந்து கொண்டவர்கள் ஜெயராஜ், கணபதி, ரவிவர்மன், பாகத் மற்றும் நண்பர்கள்.

செப்டம்பர் 5 தண்டுவட விழிப்புணர்வு நாள் பிரச்சாரத்தை ராஜபாளையத்தில் சேத்தூர் கணேசன் அவர்கள் காவல்துறை உதவியுடன் பேரணியாக நடத்தினார்.

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பொறுப்பாளர் திரு சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் அலெக்சாண்டர் சபீர் முருகன் ஞானசேகர் சிவானந்தம் கலைச்செல்வம் மற்றும் டிடிஒ இன்ஸ்பெக்டர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நமது நண்பர்கள் மிகச் சிறப்பாக தண்டுவட நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர் .

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு சுகுண குமார் அவர்கள் பிளக்ஸ் பேனர் மூலம் கண்டுவிட விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று(5.9.19) தண்டுவட விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் நமது செயற்குழு உறுப்பினர் ப.வள்ளிநாயகம் மற்றும் நமது மூத்த சகோதரர் ஜான் சாமுவேல் ஆகியோர் இணைந்து தண்டுவட நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை சிபா முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட டோர் அமைப்பு நாள் 05,09,2019 இன்று பொது மக்களிடம் புதியபேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியபோது…??

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்டுவட பாதிப்பு தின நிகழ்ச்சியில் ஆதிகேசவன் அவர்கள் அறிவுரை யின்பேரில் சங்கர் ஆற்றிய உரை

வேலூர் சிபா சந்திப்பு 28.8.2019 அன்று வேலூரில் உள்ள ஒர்த் ட்ரஸ்டில் நடைபெற்றது .

அன்புடையீர் வணக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒர்த் ட்ர்ஸ்டில் 28/08/2019 அன்று புதன்கிழமை நடைபெற்றது

வேலூரில் முதுகுதண்டுவடம்பாதிக்கப்பட்டோருக்கான மேளா நடைபெற்றது இதில் பாதிப்பான ஆட்கள் 95 பேர் உறவினர்கள் 110பேர் C.M.C Doctors ,5பேர் செவிலியர் பிசியோதெரபிஸ்ட் 5பேர் social அலுவலர்கள் 4 பேர் மற்றபடி N.C.C. Student 12 பேர் சிலர் கணக்கில் இருக்கிறார்கள் ஆனால் மொத்தம் 256

சிறப்பு அழைப்பாளர்கள் திருவாளர்கள் ஜனனி பிக்பஜார் P.சதீஷ்குமார் அவர்கள்,Dr.Prasanth,Worthtrust முத்ன்மைசெயல் அலுவலர் மற்றும் மேலான்மை இயக்குனர்,
Ms விண்ணரசிகீதா அவர்கள் துணைபொதுமேளாளர்,பள்ளிதாளாளர்
உதவும் உள்ளங்களமைப்பு இரா.சந்திரசேகரன் ,சோசியல் அலுவலர்கள் இளங்கோ ,Dr.குரு நாகராஜன்,மகேஷ்,ஜோஷ்யா
S.I.P.A.
தலைவர். திரு ஞானபாரதி,
பொருளாலர் திரு. வந்தியத்தேவன் அவர்கள்
Pandiyan
A.Srinivasan
R.R.Palani
S.Sathish kumar
A.Amirdhalingam
L.Jayakumar
Bharthrajan
P.V.Nagaraj
Annamalai
Balakrishanan
Kumar
Vict0r

பெண்கள் அணி எங்களின் உறுதுணையாளர்கள்
Balalatha
Sobana
Kanagadevi
Sudha
Ammu
Rose
Latha
Anjali
Kantha
சிறு நிகழ்ச்சியை மிகப்பெரிய நிகழ்ச்சியாக்கி எங்களுக்கு தன்னம்பிக்கை ஒருபடி மேலே உயர்த்தியமைக்கு நன்றி?நன்றி?. நாங்கள் பம்மைகளின் நடனத்தை கண்டோம்

இவ்வளவு பேருக்கும் உணவளித்து காபி பிஸ்கட் கொடுத்து,கிட்டதட்ட Urine tube,jelly,catheter 2000ரூபாய் அளவிளான பொருட்களை கொடுத்து எங்கள் பெயர் வெளியிட வேண்டாம் என்று எங்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் இந்த தவறை நானும் சதீஷும் செய்கின்றோம்.ஐயா மன்னிக்கவும். நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளுக்கேற்ப நாங்கள் செய்கின்றோம்
சாய்ராம் ட்ரஸ்ட் எங்களுக்கு அனைத்தும் செய்தார்கள் இன்னும் என்ன வேண்டுமோ நங்கள் செய்கிறோம் என்றார்கள் நன்றி ஐயா???????மேலும் சிலருக்கு கடமைபட்டுள்ளோம்

வீல் சேர் தள்ள தெரியாதவர்கள் பலபேர் உள்ளனர் ஆனால் வீல்சேரில் இவ்வளவு சாகசமா வியந்து போணோம் வேலுச்சாமி டீமை பார்த்து, WORTH TRUST ,N.C.C. மானவர்கள்,Kerthivasan,
எங்களை தம் பிள்ளைகள் னோல் பார்த்தது இந்த பிள்ளைகளே தேனீ யின் சுறுசுறுப்பு எங்களை அமர வைத்து அனைத்தும் எங்களிடம் கொண்டுவந்து சேர்த்து கனிவான உபசரனைகள் (இந்த உபசரனைகளை கேட்டால் கண்ணில் நீர்ததும்பும் எம் பிள்ளைகளுக்கு காது கேட்காது வாய்பேச வராது ஆனால் எங்களுக்கு அனைத்தையும் புரிய வைத்தார்கள் நாங்யள் அவர்களிடம் கற்றுக்கொண்டது ஏராளம்???????

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)  – Kids Dance

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)

Vellore Mela -(29Aug2019)

 

கோயம்புத்தூரில் சக்கர நாற்காலி அணுகக்கூடிய போக்குவரத்து சேவை ‘சாரதி’

கோயம்புத்தூரில் முதல் சக்கர நாற்காலி அணுகக்கூடிய போக்குவரத்து சேவை ‘சாரதி’யை துவங்கியுள்ளது ஸ்வர்கா அறக்கட்டளை. நகர்ப்புறத்திற்குள்ளேயும், புறநகரிலும் உள்ள எந்தவொரு இடத்திற்கும் மாற்றுதிரனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் எந்தவொரு தனிநபருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான பயணங்களை ‘சாரதி’ வழங்குகிறது. ஒரு சக்கர நாற்காலி, இரண்டு தனி நாற்காலிகள், ஒரு 6 “x 2” நீண்ட சோபா படுக்கை மற்றும் ஒரு சுழல் இருக்கை கொண்ட ஒரு இரசாயன கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன. சக்கர நாற்காலி பயனர்களுக்கு உதவ வாகன ஓட்டுனர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். சக்கர நாற்காலி வாகனத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மடிக்கும் சாய்தள அமைப்பின் மூலம் வாகனத்தினுள் செல்ல வசதி செயப்பட்டுள்ளது. சாரதி சேவையில் தற்போது ஒரு வாகனம் உள்ளது, இச்சேவை வாரம் 7 நாட்களுக்கு கிடைக்கும்.
 
இந்த சேவையை பயன்படுத்த 88709-55111 அல்லது 73977 00482 என்ற எண்களை காலை 7மணி முதல் இரவு 10மணி வரை பயன்படுத்தலாம்.

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2017

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2017 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு அளவை பொருத்து, அவர்களுக்கு சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாடுமுழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை இவர்கள் எளிதில் பெறமுடியும். இந்த ஆதார் அட்டையை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது.

செய்தி உதவி – இணையதளம்

நீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி

தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறை படித்த இளைஞர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்குகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செய்தி உதவி – இணையதளம்

மேலும் விபரங்கள் – அரசு இணையம்

PDF தரவிறக்கம் – கோப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழுந்து சேவை

தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழுந்து சேவை பெங்களூரு – கிக் ஸ்டார்ட் [91-8105600445 / 080-3232 7777, info@kickstartcabs.com]  நிறுவனம் மூலமும், மும்பை – மேரு எனேபில் [022 44 22 44 22, feedback.enable@merucabs.com] நிறுவனம் மூலமும்  செயல்பட்டு வருகிறது. அடுத்து கோவாவிற்கு இச்சேவையை  யூமொஜோ [+91 022-29400494, info@umoja.in] நிறுவனம் வழங்க விருக்கிறது.

 

Meru-Enable

மேரு எனேபில் – மும்பை

k

கிக் ஸ்டார்ட் – பெங்களூரு

காணொளிகள் – கிக் ஸ்டார்ட், மேரு எனேபில் 

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2016

ரீஹேப் முரசு – பிப்ரவரி 2016 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

படிப்பு, பயிற்சியோடு வேலையும் தரும் அரசு வங்கி

வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியால் தனியார் துறைக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசு வங்கிகள் பணியாளர்களையும், அதிகாரிகளையும் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தி வருகின்றன. அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும், அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS- Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதுபோன்ற நியமனங்கள் ஒருபுறம் மும்முரமாக நடக்க, ஒருசில வங்கிகள் முதலில் தகுதியான நபர்களைத் தேர்வுசெய்து அவர்களை வங்கி சம்பந்தப்பட்ட படிப்பைப் புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் படிக்க வைத்து அதன் பிறகு அவர்களை வங்கி அதிகாரிகளாக நியமித்துக்கொள்கின்றன.

அந்த வகையில், பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியைத் தொடர்ந்து யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியும், வங்கி மற்றும் நிதிச்சேவை குறித்த முதுகலைப் பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance) படிக்கவைத்துப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு வங்கி அதிகாரி (Probationary Officer) பணி வழங்க முன்வந்திருக்கிறது.

அடிப்படைத் தகுதிகள்

என்ஐஐடி இன்ஸ்டிடியூட் ஆ பைனான்ஸ், பேங்கிங், இன்சூரன்ஸ் டிரெய்னிங் என்ற புகழ்பெற்ற வங்கி கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஓராண்டு கால முதுகலை டிப்ளமா படிப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு 100 பேர் தேர்வுசெய்யப்படுவார்கள்.

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் இந்தப் பட்டயப் படிப்புக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியில் நடத்தப்படும் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு (வங்கிச் சேவைத் தொடர்பான கேள்விகளுக்கு முக்கியத்துவம்) ஆகியவற்றில் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வை ஆகஸ்ட் 7-ம் தேதி நடத்த உத்தேசித்துள்ளனர்.

சம்பளத்தோடு பயிற்சி

இந்த ஓராண்டு கால டிப்ளமா படிப்பை முடித்து யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நேரடியாக அதிகாரி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் அந்த வங்கியின் இணையதளத்தின் (www.unitedbankofindia.com) மூலம் ஜூலை 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். (வங்கியின் இணையதளப் பக்கத்தில் “Recruitment” என்ற பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்).

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் படிப்புக் கட்டணமாக ரூ.3.20 லட்சம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியானது, மிகக் குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும். படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த பின்னர்க் கடனை மாதாந்திர தவணையில் செலுத்திவிடலாம்.

மேலும், பயிற்சிக் காலத்தில் முதல் 9 மாதங்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகையும், 3 மாத கால இன்டர்ன்ஷிப் காலத்தில் மாதம் ரூ.12 ஆயிரமும் உதவித் தொகையாகவும் வழங்குவார்கள். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள்.

அப்போது சம்பளம் ரூ.55 ஆயிரம் கிடைக்கும். 5 ஆண்டு பணியை முடித்த பின்பு இந்த கல்விக்கடன் தொகை போனஸாக திருப்பி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத்தேர்வுக்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும், சிறுபான்மை வகுப்பினருக்கும் இலவசப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுமுறை, பாடத்திட்டம், பயிற்சி, பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

செய்தி உதவி – இணையதளம்

இணையதளம் மூலம் இலவச மென்பொருள் பயிற்சி வகுப்பு

அடிப்படை கணினி/இணையதளம் பற்றிய புரிதல் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும் இணையதளம் வடிவமைக்கும் அடிப்படை பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் MOOCs (Massive Open Online Courses) நிறுவனம் இணையதளம் மூலம் நடத்தும் IMAD (Introduction to Modern Application Development) வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

வகுப்புகள் செப்டம்பர் 2016இல் துவங்குகின்றது

மேலும் விவரங்களுக்கு – IMAD TECH

சிபா பற்றி

Spinal Injured Persons Association (SIPA) is a Tamilnadu based registered self-help group working towards the upliftment of persons with spinal cord injury. At SIPA, we strive to create a peer network that has access to information regarding self care, medical advice, financial independence, sport and much more.