நீட்ஸ் திட்டம் – தொழில்துவங்க மானியத்துடன் கடனுதவி
தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறை படித்த இளைஞர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்குகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்தி உதவி – இணையதளம்
மேலும் விபரங்கள் – அரசு இணையம்
PDF தரவிறக்கம் – கோப்பு