செப்டம்பர் 5. உலக தண்டுவட தினம்- SIPA அமைப்பு நடத்திய தண்டுவட நாள் விழிப்புணர்வு
செப்டம்பர் 5. உலக தண்டுவட தினத்தை முன்னிட்டு தேனியில் சிபா அமைப்பு மற்றும் ராம்ஜி டிரஸ்ட் இணைந்து நடத்திய. தண்டுவட நாள் விழிப்புணர்வு பேரணி நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிபா அமைப்பின் செயலாளர் திரு வேங்கட பூபதி அவர்கள் நிகழ்வை முன்னின்று நடத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் கண்டுவிட விழிப்புணர்வு நாள் காவல்துறை உதவியுடன் சிறப்பாக பேரணி நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முதுகுதண்டுவட பாதிப்பு தினமான இன்று சாலை விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு கொடுத்த தருணத்தில், இதில் கலந்து கொண்டவர்கள் ஜெயராஜ், கணபதி, ரவிவர்மன், பாகத் மற்றும் நண்பர்கள்.
செப்டம்பர் 5 தண்டுவட விழிப்புணர்வு நாள் பிரச்சாரத்தை ராஜபாளையத்தில் சேத்தூர் கணேசன் அவர்கள் காவல்துறை உதவியுடன் பேரணியாக நடத்தினார்.
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பொறுப்பாளர் திரு சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் அலெக்சாண்டர் சபீர் முருகன் ஞானசேகர் சிவானந்தம் கலைச்செல்வம் மற்றும் டிடிஒ இன்ஸ்பெக்டர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நமது நண்பர்கள் மிகச் சிறப்பாக தண்டுவட நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர் .
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு சுகுண குமார் அவர்கள் பிளக்ஸ் பேனர் மூலம் கண்டுவிட விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று(5.9.19) தண்டுவட விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது .
கன்னியாகுமரி மாவட்டத்தில் நமது செயற்குழு உறுப்பினர் ப.வள்ளிநாயகம் மற்றும் நமது மூத்த சகோதரர் ஜான் சாமுவேல் ஆகியோர் இணைந்து தண்டுவட நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை சிபா முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட டோர் அமைப்பு நாள் 05,09,2019 இன்று பொது மக்களிடம் புதியபேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியபோது…??
அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்டுவட பாதிப்பு தின நிகழ்ச்சியில் ஆதிகேசவன் அவர்கள் அறிவுரை யின்பேரில் சங்கர் ஆற்றிய உரை