கோயம்புத்தூரில் முதல் சக்கர நாற்காலி அணுகக்கூடிய போக்குவரத்து சேவை ‘சாரதி’யை துவங்கியுள்ளது ஸ்வர்கா அறக்கட்டளை. நகர்ப்புறத்திற்குள்ளேயும், புறநகரிலும் உள்ள எந்தவொரு இடத்திற்கும் மாற்றுதிரனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் எந்தவொரு தனிநபருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான பயணங்களை ‘சாரதி’ வழங்குகிறது. ஒரு சக்கர நாற்காலி, இரண்டு தனி நாற்காலிகள், ஒரு 6 “x 2” நீண்ட சோபா படுக்கை மற்றும் ஒரு சுழல் இருக்கை கொண்ட ஒரு இரசாயன கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன. சக்கர நாற்காலி பயனர்களுக்கு உதவ வாகன ஓட்டுனர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். சக்கர நாற்காலி வாகனத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மடிக்கும் சாய்தள அமைப்பின் மூலம் வாகனத்தினுள் செல்ல வசதி செயப்பட்டுள்ளது. சாரதி சேவையில் தற்போது ஒரு வாகனம் உள்ளது, இச்சேவை வாரம் 7 நாட்களுக்கு கிடைக்கும்.
இந்த சேவையை பயன்படுத்த 88709-55111 அல்லது 73977 00482 என்ற எண்களை காலை 7மணி முதல் இரவு 10மணி வரை பயன்படுத்தலாம்.