மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி-மதுரை
உடல் ஊனமுற்றோருக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியை, மதுரை மாவட்ட உடல் ஊனமுற்றோர் சதுரங்க சங்கம் மற்றும் அலக் மறுவாழ்வு அறக்கட்டளை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 17 நவம்பர் 2019 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள ஸ்பார்க்ஸ் வித்யாலயா சிறப்பு பள்ளியில் நடத்த இருக்கிறார்கள்.
இதில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை, ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
குறைந்தபட்சம் 50% உடல் ஊனமுற்றோர் ஆக இருக்க வேண்டும்.
போட்டி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெறும். முன்பதிவு செய்தோருக்கு மதிய உணவு வழங்கப்படும்.
போட்டிக்கு முன்னர் மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
போட்டிக்கான கட்டணம் ரூ 50
2019-2020 ஆண்டுக்கான பதிவு கட்டணம் ரூ 100.
தங்கள் பெயரை பதிவு செய்ய கீழ்காணும் இணைப்பை சொட்டுக,
“https://airtable.com/shrYq71RplafXH9UR”
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள டாக்டர் அமீர் 9843529550