Monthly Archives: November 2019

Home / 2019 / November

மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி-மதுரை

உடல் ஊனமுற்றோருக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியை, மதுரை மாவட்ட உடல் ஊனமுற்றோர் சதுரங்க சங்கம் மற்றும் அலக் மறுவாழ்வு அறக்கட்டளை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 17 நவம்பர் 2019 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள ஸ்பார்க்ஸ் வித்யாலயா சிறப்பு பள்ளியில் நடத்த இருக்கிறார்கள்.

இதில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை, ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 50% உடல் ஊனமுற்றோர் ஆக இருக்க வேண்டும்.

போட்டி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெறும். முன்பதிவு செய்தோருக்கு மதிய உணவு வழங்கப்படும்.

போட்டிக்கு முன்னர் மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

போட்டிக்கான கட்டணம் ரூ 50
2019-2020 ஆண்டுக்கான பதிவு கட்டணம் ரூ 100.

தங்கள் பெயரை பதிவு செய்ய கீழ்காணும் இணைப்பை சொட்டுக,
“https://airtable.com/shrYq71RplafXH9UR”

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள டாக்டர் அமீர் 9843529550

 

24-10-2019- 9 மணி அளவில் சிபாவின் செயற்குழுக்கூட்டம் நடத்தப்பட்டது

நேற்று இரவு (24-10-2019) 9 மணி அளவில் சிபாவின் செயற்குழுக்கூட்டம் தொலை உரையாடல் மூலம் நடத்தப்பட்டது.

கலந்துகொண்டவர்கள்.

1. ஞானபாரதி

2.வெங்கட பூபதி

3.ரவிச்சந்திரன்

4. லலித்குமார்

5. வந்தியத்தேவன்

6. வள்ளிநாயகம்

7.ஜெயராஜ்

8.பழனி

9.சக்திவேல்

கீழ்க்காணும் பொருள்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.

1.தண்டுவடம் காயமடைந்தோருக்கு மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது பற்றி.

2. தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்ட பேட்டரி வீல்சேரில் உள்ள குறைபாடுகளை களைவது தொடர்பாக.

3. ஸ்பைனல் கிட் திட்டத்தின் மூலம் கத்திட்டர், யூரோ பேக், ஜெல்லி ஆகியவற்றை எல்லா மாவட்டங்களிலும் வழங்குவது தொடர்பாக .

தீர்மானங்கள்

1.பெட்ரோல் ஸ்கூட்டரை உடனடியாக வழங்க வேண்டும் என ஆணையரிடம் வலியுறுத்தல்.

2.பேட்டரி வீல்சேரில் உள்ள குறைபாடுகளை களைய ஆணையரிடம் புகார் தெரிவித்தல் மற்றும் தண்டுவடம் காயமடைந்தோருக்கு பேட்டரி வீல் சேர் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் இரண்டையும் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தல்.

3.ஒவ்வொரு மாவட்டத்திலும் நமது பொறுப்பாளர்கள் சுகாதாரத்துறை இணை இயக்குனரை அணுகி கதீட்டர், யூரோ பேக் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

– சிபா நிர்வாகக்குழு

சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் (29-09-2019) நடத்தப்பட்டது

சிபா அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று இரவு (29-09-2019) தொலைபேசி உரையாடல் வாயிலாக நடத்தப்பட்டது பின்வரும் நிகழ்வுகள் பற்றி அதில் விவாதிக்கப்பட்டது.

1. ரீகேப் முரசு புத்தகம் வெளியீடு தொடர்பாக ..

2. 2020ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்துவது v தொடர்பாக.

3. செப்டம்பர் 5 அன்று விழிப்புணர்வு பிரச்சாரம் திட்டமிட்ட அளவு நடைபெறாதது தொடர்பாக.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. ரீகேப் முரசு என்கிற புத்தகத்தின் பெயரை தமிழில் மறுவாழ்வு மலர் என்று மாற்றம் செய்வது, கூடுதலாக ஆசிரியர்களை சேர்த்து மேலும் சிறப்பாக நடத்துவது, ஆண்டுக்கு நான்கு அல்லது ஆறு முறை பதிப்பது குறித்த சாத்தியங்களை ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

2. 2020ம் ஆண்டு செயற்குழு/பொதுக்குழுக் கூட்டத்தை அமர்சேவா சங்கத்தில் அனுமதிபெற்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது

3. தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களில் அரசின் பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றவர்களுக்கும் பேட்டரி வீல் சேர் வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது

4. அடுத்த ஆண்டு செப்டம்பர் 5 விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேலும் கூடுதலான இடங்களில் நடத்துவது முயற்சி எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

– சிபா நிர்வாகக்குழு

 

சிபா பற்றி

Spinal Injured Persons Association (SIPA) is a Tamilnadu based registered self-help group working towards the upliftment of persons with spinal cord injury. At SIPA, we strive to create a peer network that has access to information regarding self care, medical advice, financial independence, sport and much more.